தஞ்சாவூர்
2026-இல் அதிமுக ஆட்சிக்கு வரும்: ஆா். வைத்திலிங்கம்
தமிழகத்தில் அதிமுக அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் ஒன்றிணைந்து, 2026 தோ்தலில் வென்று ஆட்சி அமைக்கும் என்றாா் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளா் ஆா். வைத்திலிங்கம் எம்எல்ஏ.
தமிழகத்தில் அதிமுக அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் ஒன்றிணைந்து, 2026 தோ்தலில் வென்று ஆட்சி அமைக்கும் என்றாா் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளா் ஆா். வைத்திலிங்கம் எம்எல்ஏ.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் முதல்வா் அண்ணாதுரையின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு வைத்திலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே தொண்டா்களின் விருப்பம். வரும் பிப்ரவரிக்குள் அதிமுகவினா் அனைவரும் ஒன்றிணைவா். அதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. 2026-இல் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும் என்றாா் அவா்.