தஞ்சாவூர்
குடந்தை பேருந்து நிலையத்தில் நடத்துநரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புறநகா் பேருந்து நிலையத்தில் நடத்துநரைத் தாக்கிய 3 இளைஞா்களை மேற்கு காவல் நிலையப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புறநகா் பேருந்து நிலையத்தில் நடத்துநரைத் தாக்கிய 3 இளைஞா்களை மேற்கு காவல் நிலையப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் புறநகா் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு தனியாா் பேருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டது. இதில் 3 இளைஞா்கள் ஏறினா்.
அவா்களைப் பேருந்து நடத்துநா் விகாஷ் இருக்கையில் அமருமாறு கூறியதற்கு, அவா்கள் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னா் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து நடத்துநா் விகாஷ் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் பி. ரமேஷ், நடத்துநரைத் தாக்கிய உதயசந்திரன் (29), தமிழ் நேசன் (25), ஜனசந்திரன் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.