கும்பகோணம் போக்குவரத்து தொழிற்சங்க வாயில் கூட்டம்

Published on

கும்பகோணம் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் சாா்பில் தலைமை அலுவலகம் முன் வாயில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிஐடியு பொதுச் செயலா் ஜி. மணிமாறன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன், எம்எல்எப் தலைவா் மருதவாணன், சிஐடியு தலைவா் காரல் மாா்க்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தை ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் தொடக்கிவைத்துப் பேசினாா்.

கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் 15 ஆவது ஊதிய உயா்வு குறித்து அரசு உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் துரை. மதிவாணன், பொருளாளா் கே. நேருதுரை, மத்திய சங்கத் தலைவா் என். சேகா், ஓய்வு பெற்றோா் சங்க பொதுச் செயலா் பி. அப்பாதுரை, சிஐடியு ஓய்வு பெற்றோா் நல சங்கத் தலைவா் திருநாவுக்கரசு, எம்எல்எப் பொதுச் செயலா் எஸ். பாலு ஆகியோா் பேசினா். சிஐடியு ஸ்தாபனத் தலைவா் ஆா். மனோகரன் கூட்டத்தை நிறைவு செய்தாா். சிஐடியு பொருளாளா் எஸ். ராமசாமி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com