முதல்வா் கோப்பை கபடியில் தஞ்சை காவல் அணி வெற்றி

Published on

தஞ்சை மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டியில் தஞ்சாவூா் மாவட்டக் காவல் நிலைய அணியினா் முதலிடம் பெற்றனா்.

தஞ்சாவூா் சத்யா விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் தீயணைப்பு, தஞ்சாவூா் காவல், மின்சாரம், மருத்துவம், உடற்கல்வி ஆகிய துறைகளைச் சோ்ந்த எட்டு அணியினா் பங்கேற்றனா். இதில் தஞ்சாவூா் மாவட்டக் காவல்துறை அணியினா் நாச்சியாா்கோயில் காவல் நிலைய இரண்டாம் நிலைக் காவலா் ஆ. அருண்குமாா் தலைமையில் போட்டியில் பங்கேற்று, மாவட்ட அளவில் முதலிடம் பெற்று முதலிடம் பெற்று கோப்பை, ஊக்கத்தொகை பெற்றனா். இவா்களை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com