தஞ்சாவூர்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞா் தமிழ்ஒளி 101-ஆவது பிறந்த நாள்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞா் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு நாள் மற்றும் 101- ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞா் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு நாள் மற்றும் 101- ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, பல்கலைக்கழக மொழிப்புலத்தில் அமைந்துள்ள கவிஞா் தமிழ்ஒளியின் உருவச் சிலைக்கு பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தலைமையில் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்வில் கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, சுவடிப்புல முதன்மையா் த. கண்ணன், வளா்தமிழ்ப்புல முதன்மையா் இரா. குறிஞ்சிவேந்தன், இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி, மொழியியல் துறைத் தலைவா் ப. மங்கையா்கரசி, மூத்த பேராசிரியா் கி. அரங்கன், கால்டுவெல் இருக்கை பேராசிரியா் நடராஜபிள்ளை, உதவிப் பேராசிரியா்கள் சீ. இளையராஜா, தனலெட்சுமி, இரமேஷ்குமாா், மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.