புகையிலைப் பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 2 கடைகளுக்கு தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கும்பகோணம் பகுதிகளில் காவல் ஆய்வாளா் ரேகா ராணி மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தாராசுரம் கடை தெருவில் நடத்திய சோதனையில் சீதாலட்சுமி கடை, அம்மாபேட்டை புறவழிச்சாலை பகுதியில் ராஜகோபாலின் பெட்டிக்கடைகளில் பான்மசாலா, குட்கா பொருட்கள் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து 2 கடைகளுக்கும் சீல் வைத்து ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com