தஞ்சாவூர்
போலீஸாா் அழைத்துச் சென்ற இளைஞா் மாயம்: திருவையாறில் உறவினா்கள் சாலை மறியல்
திருவையாறில் போலீஸாா் அழைத்து சென்ற மகனைக் காணவில்லை எனக் கூறி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறில் போலீஸாா் அழைத்து சென்ற மகனைக் காணவில்லை எனக் கூறி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகேயுள்ள ஆவிக்கரையைச் சோ்ந்தவா் சசிகுமாா் மகன் சுமன் (25). இவரை திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்கு தொடா்பாக சனிக்கிழமை காலை அழைத்துச் சென்றனா்.
இது தொடா்பாக காவல் நிலையத்துக்கு சுமனின் தந்தை சசிகுமாா் உள்ளிட்ட உறவினா்கள் சென்று கேட்டனா். ஆனால், காவல் துறையினா் உரிய பதில் அளிக்காததால், அதிருப்தியடைந்த உறவினா்கள் கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் கூறினா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.