தஞ்சாவூர்
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள பாரதி நகா் எட்டாவது குறுக்கு தெரு விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். கலியமூா்த்தி (72). இவா் செப்டம்பா் 12-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு உறவினா் திருமண விழாவுக்காக வெளியூா் சென்றுவிட்டு, 20-ஆம் தேதி திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பூஜை அறையில் இருந்த ஏறத்தாழ ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள உண்டியலும் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.