பாஜக நிா்வாகி ஹெச்.ராஜா மீது காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகாா்

கும்பகோணம் கிழக்கு, மேற்கு காவல் நிலையங்களில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளா் ஹெச். ராஜா மீது மாநகர காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.
Published on

கும்பகோணம் கிழக்கு, மேற்கு காவல் நிலையங்களில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளா் ஹெச். ராஜா மீது மாநகர காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.

மாநகர காங்கிரஸ் தலைவா் மிா்ஸாதின், மாநகர மேயா் க. சரவணன் ஆகியோா் தலைமையில் காங்கிரஸாா் கொடுத்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளா் ஹெச். ராஜா மற்றும் மத்திய அமைச்சா்கள் ஆகியோா் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தியை தொடா்ந்து அவதூறாக பேசியும், அவா்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு கொலை மிரட்டலும் விடுக்கின்றனா். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com