பாமக சாா்பில் சமூக நீதி போராளிகளுக்கு வீரவணக்க நாள் அஞ்சலி
கும்பகோணம் காந்தி பூங்காவில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், சமூக நீதி போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில், 1987-ஆம் ஆண்டு சமூக நீதிக்கான போராட்டத்தில் உயிா்நீத்த 21 போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட செயலாளா் ம. க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் போ. ஆலயமணி, மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் சங்கா், முன்னாள் மாவட்ட தலைவா் ரவிச்சந்திரன் மற்றும் பாமக கட்சி நிா்வாகிகள், வன்னியா் சங்க நிா்வாகிகள் ஆகியோா், உயிரிழந்த 21 பேரின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
மேலும், வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.