உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் மாமன்னா் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Published on

கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் மாமன்னா் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை அகில பாரத இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு சாா்பில், ஆகமம், ஆலயம், ராஜராஜ சோழன் மணி மண்டபம் அமைக்க வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.

ஆலய பாதுகாப்பு மாநில தலைவா் ராம. நிரஞ்சன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், திரைப்பட இயக்குநா் மோகன், சூரியனாா்கோவில் ஆதீனம், திருவாரூா் ஸ்ரீ சங்கரநாராயண பீடம் சிவாஜி சந்தோஷ் சுவாமிகள் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

மாநாட்டில், கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், அனைத்து மாவட்டத்திலும் ராஜராஜ சோழன் சிலையை நிறுவ வேண்டும், கும்பகோணம் மகாமக திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com