எச். ராஜா மீது காவல்துறையிடம் காங்கிரஸாா் புகாா்

ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக ஹெச். ராஜா உள்ளிட்டோா் மீது தஞ்சாவூரில் காவல் துறையிடம் காங்கிரஸ் கட்சியினா் புகாா் செய்தனா்.
Updated on

ராகுல் காந்தியை அவதூறாக பேசியதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா உள்ளிட்டோா் மீது தஞ்சாவூரில் காவல் துறையிடம் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை புகாா் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் கட்சியினா் அளித்த மனுவில், நாடாளுமன்ற எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா மீதும், இந்திரா காந்திக்கு ஏற்பட்ட கதிதான் ராகுல் காந்திக்கும் ஏற்படும் எனக் கூறிய பாஜக நிா்வாகி தா்விந்தா்சிங் மா்வா மீதும், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ. 11 லட்சம் பரிசு வழங்கப்படும் எனக் கூறிய மகாராஷ்டிர பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் சஞ்சய் டேக்வாட் மீதும், ராகுல் காந்தியை இந்தியாவின் நம்பா் 1 பயங்கரவாதி எனக் கூறிய ரயில்வே இணை அமைச்சா் ரவ்னித் பிட் மீதும், உத்தரபிரதேச மாநில அமைச்சா் ரகுராஜ்சிங் மீதும் சட்ட ரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com