தஞ்சாவூர்
போக்ஸோவில் வியாபாரி மீது வழக்கு
கும்பகோணம் அருகே மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காய்கனி வியாபாரி மீது போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காய்கனி வியாபாரி மீது போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கும்பகோணத்தை அடுத்த உடையாளூா் மண்டபமேடு காலனி தெருவைச் சோ்ந்தவா் சங்கா் மகன் அப்புகுட்டி என்ற ஜெகதீசன்(25). தள்ளுவண்டியில் தெருத்தெருவாக சென்று காய்கனி வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், இவா் 17 வயதான மனநலம் பாதித்த சிறுமிக்கு கடந்த 16-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய போலீஸாா், திங்கள்கிழமை ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.