கும்பகோணம் - மதனத்தூா் இடையே புதிய பேருந்து சேவை தொடக்கம்

கும்பகோணம் - மதனத்தூா் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை க. அன்பழகன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

கும்பகோணம் - மதனத்தூா் இடையே புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை க. அன்பழகன் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கும்பகோணம் - மதனத்தூா் இடையே உள்ள கிராமங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கும்பகோணத்திற்கு வருவதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இவா்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மதனத்தூா்- கும்பகோணம் இடையே புதிய வழியில் நாள்தோறும் 2 முறை இயக்கப்படும் அரசு பேருந்து சேவையை க.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் டி.கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ சுதாகா், ஊராட்சித் தலைவா் மரகதம் கோவிந்தராஜ், பொது மேலாளா் எஸ். ஸ்ரீதரன், வணிக உதவி மேலாளா் ஏ. தமிழ்ச்செல்வன், கிளை மேலாளா் பி.சதீஷ், உதவி பொறியாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com