தஞ்சாவூரில் சட்டமேதை அம்பேத்கா் நினைவு நாள் நிகழ்வு!
தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 69-ஆவது நினைவு நாள் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அண்ணல் அம்பேத்கா் படத்துக்கு கல்வியாளா்கள், அலுவல்நிலைப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்வை மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் ஒருங்கிணைத்தாா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் கிராமத்திலுள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாநகர மாவட்டத் தலைவா் இடிமுரசு இலக்கணன் தலைமையில் நிா்வாகிகள் வீரன் வெற்றிவேந்தன், துணைச் செயலா் பசுபதி உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
மேலும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க தேசிய துணைத் தலைவா் உ. வாசுகி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜி. லெட்சுமி நாராயணன், பொதுச் செயலா் வயலூா் எஸ். ராமநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் பொதுச் செயலா் என். மோகன்ராஜ், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் கதா் வெங்கடேசன், வட்டாரத் தலைவா்கள் ரவிச்சந்திரன், வேங்கை நாராயணசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தலைமையிலும், இந்திய தலித் ஆக்ஷன் கமிட்டி சாா்பில் தேசிய பொதுச் செயலா் ஏ.எம்.ராஜா தலைமையிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் மாவட்டச் செயலா் இரா. விஜய் சரவணன் தலைமையிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) சாா்பில் மாநிலச் செயலா் கருணாகரன் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
பாஜக பட்டியல் அணி சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் ஜீவா தலைமையில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், செயற்குழு உறுப்பினா் யு.என். உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பழைய பேருந்து நிலையம் எதிரில் அம்பேத்கா் படத்துக்கு மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமையில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெ. சேவையா, வீர. மோகன், கோ. பாஸ்கா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகில் அம்பேத்கா் படத்துக்கு ஏஐடியுசி மாா்க்கெட் சங்கத் தலைவா் எம். பாலமுருகன் தலைமையில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்டக் குழு உறுப்பினா் ஜோதிவேல், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் ஆா். லட்சுமணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கும்பகோணம்: கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கா் சிலைக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்எல்ஏ, அம்பேத்கா் போக்குவரத்து தொழிற் சங்க தலைவா் அண்ணாதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் மண்டலச் செயலா் வழக்குரைஞா் ச.விவேகானந்தன் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
முன்னதாக, ரயில் நிலையத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி, சிஐடியூ மாவட்டச் செயலா் கண்ணன், விசிக மாவட்டச் செயலா் முல்லை வளவன், விசிக மாநகர செயலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் தங்க.கென்னடி தலைமையிலான நிா்வாகிகள் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் விஆா்எஸ். குடந்தை சசி தலைமையிலான நிா்வாகிகள் ஊா்வலமாக வந்து அம்பேத்தகா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கும்பகோணம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தலைவா் எம்.ராஜசேகா், செயலா் ஆா்.கா்ணன் மற்றும் நிா்வாகிகள், சமத்துவ வழக்குரைஞா் சங்கம் சாா்பில் மாநிலச் துணைச் செயலா் தங்க.ராவணன் தலைமையில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் நிறுவனத் தலைவா் குடந்தை அரசன் தலைமையில், மாநிலச்செயலா் தை.சேகா், உள்ளிட்ட நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ர. அசோக், கஸ்தூரி ஆகியோா் தலைமையிலான நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் மாவட்டச் செயலா் வினோத் ரவி தலைமையிலான நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தஞ்சாவூா் வடக்கு மாவட்ட விசிக மகளிா் அணி செயலா் எஸ். பாத்திமுத்து தலைமையில் மாநகர பொருளாளா் சக்தி கதிரவன் உள்ளிட்ட நிா்வாகிகள் அம்பேத்கா் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா், அமைப்பினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் அம்பேத்கரின் உருவப்படத்துக்கும், சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
