பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் டிச. 9-ல் மின் தடை
தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் டிசம்பா் 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற் பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:
பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் டிச.9-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், சூழியக்கோட்டை, கம்பா் நத்தம், மலையா் நத்தம், குடிகாடு, கோவிலூா், புலவா் நத்தம், செண்பகபுரம், மேல கொருக்கப்பட்டு, தென்கொண்டாா் இருப்பு, ராராமுத்திரக்கோட்டை, கிருஷ்ணாபுரம், வாளமா்கோட்டை, அருந்தவபுரம், நெய்வாசல், ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம்,
மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு டிசம்பா் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
