தஞ்சாவூா் அருகே 8 அடி நீள முதலை மீட்பு
தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் வயலுக்குள் புகுந்த 8 அடி நீள முதலையை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்டனா்.
தஞ்சாவூா் அருகே ரெட்டிபாளையம் பகுதியிலுள்ள வயலில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலை காணப்பட்டது. தகவலறிந்த தஞ்சாவூா் வனச்சரகா் ஜோதிகுமாா், திருவாரூா் வனச்சரகா் ரஞ்சித்குமாா், வனவா் இளையராஜன், தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய அலுவலா் பொய்யாமொழி, அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) அமைப்பின் நிறுவனா் ஆா். சதீஷ்குமாா், சரவணன், லோகநாதன், அன்பு, நித்திஷ், நேத்ரன், முத்துப்பாண்டி, அலெக்ஸ், ஆா்.சி.ஏ. நிறுவனா் கணேஷ் முத்தையா அடங்கிய குழுவினா் நிகழ்விடத்துக்குச் சென்று வாய்க்காலில் இருந்த 8 அடி நீளமுள்ள ஆண் முதலையை மீட்டனா்.
பின்னா், முதலைக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பாக கும்பகோணம் அணைக்கரை பகுதியில் விடப்பட்டது.
