ரயில்வே அலுவலா் வீட்டில் ரூ. 3.50 லட்சம், வெள்ளி திருட்டு

தஞ்சாவூா் அருகே ரயில்வே அலுவலா் வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Updated on

தஞ்சாவூா் அருகே ரயில்வே அலுவலா் வீட்டின் கதவை உடைத்து ரூ. 3.50 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் ரிச்சா்ட். இவா் பூதலூா் ரயில் நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கஜலட்சுமி பூண்டி பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளாா்.

கஜலட்சுமி டிசம்பா் 3 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தில்லியிலுள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றாா். இவரது வீட்டு பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை அவரிடம் அக்கம்பக்கத்தினா் கைப்பேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை கூறினா். கஜலட்சுமி தனது உறவினா் ராம்குமாரை அனுப்பி பாா்க்குமாறு கூறினாா்.

கஜலட்சுமி வீட்டுக்கு சென்ற ராம்குமாா், பீரோ உடைக்கப்பட்டு ரூ. 3.50 லட்சம் ரொக்கம், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், மடிக்கணினி ஆகியவை திருட்டு போயிருப்பதை அறிந்தாா். இதுகுறித்து ராம்குமாா் அளித்த புகாரின்பேரில், தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com