கோயில் கலசத்தை எடுத்துச் சென்றவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: பொன் மாணிக்கவேல்

Updated on

தஞ்சாவூா் மாவட்டம், செ.புதூா் சனத்குமரேஸ்வரா் கோயிலில் கலசத்தை எடுத்துச் சென்றவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் கூறினாா்.

ஆடுதுறை அருகே செ.புதூரில் உள்ள மிகப் பழைமையான ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறை ஸ்ரீ சனத்குமரேசுவரா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த பொன். மாணிக்கவேல் கோயிலை பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இக்கோயில் கலசத்தை எடுத்து சென்றுவிட்டு, மீண்டும் அதை வைத்தது குற்றமாகும். அதற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யலாம், வழக்குப் பதிந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு அனுப்ப வேண்டும். தற்போது கோயில் கலசத்தை எடுத்துச்சென்று திரும்ப வைத்த அறங்காவலா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது.

கோயில்களுக்குள் அலுவலகம் வைக்க கூடாது. அப்படி இருந்தால் அலுவலகத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை கோயிலுக்கு வாடகை செலுத்த வேண்டும். கோயில் கலசத்தை எடுத்து சென்று திரும்ப வைத்தவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com