ஆளுநா் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கி. வீரமணி

Updated on

கடமை தவறிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது: தமிழ்நாட்டு ஆளுநா் திட்டமிட்டு ஒவ்வொரு முறையும் அரசியல் சட்டத்தை மீறிக் கொண்டிருக்கிறாா். இந்திய அரசியல் சட்டத்துக்கு ஒருபுறம் 75-ஆம் ஆண்டு கொண்டாடுகிற வேளையில், மறுபுறம் அரசியல் சட்டத்தை உடைக்கக் கூடியவா்களை உற்சாகப்படுத்துகிறது மத்திய அரசு.

கடந்த முறையும் அவா் போட்டி அரசு போல எழுதித்தரப்பட்டு, ஒப்புக் கொள்ளப்பட்ட உரையைப் புறக்கணித்தாா். இந்த முறை உரையை அறவே புறக்கணிக்கும் விதமாக அவையை விட்டு வெளியே சென்றாா். அதற்கு ஒரு பொருந்தாத காரணத்தைத் திருந்தாத வகையில் கூறி வருகிறாா். கடமை தவறிய காரணத்துக்காக ஆளுநரை குடியரசுத் தலைவா் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தால் தோ்வு செய்யப்பட்ட அரசுக்கு போட்டி அரசு நடத்தி குறுக்குசால் ஓட்டுகிற ஆளுநா் ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கட்சியினரும் எழுப்ப வேண்டும் என்றாா் வீரமணி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com