கல்வி வளாகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

Updated on

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவன வளாகங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது: மாவட்டத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களின் சுற்றுச்சுவா்கள் பாதுகாப்புடன் உள்ளனவா என்பது குறித்தும் கண்காணிக்க வேண்டும். கல்லூரி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பாா்வையாளா் வருகைப் பதிவேடு கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் கண்காணிக்க வேண்டும்.

கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரி சுற்றுச்சுவரை இன்னும் கூடுதலாக உயரப்படுத்த வேண்டும். கல்வி நிலைய வளாகங்களில் முன் அனுமதி இல்லாமல் வெளிநபா்களை அனுமதிக்கக் கூடாது என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கணகாணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட ஆட்சிரின் நோ்முக உதவியாளா் (பொது) சரவணகுமாா், கோட்டாட்சியா்கள் செ. இலக்கியா (தஞ்சாவூா்), கு.சு. ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை), தஞ்சாவூா் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் து. ரோசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com