தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி வெடிபொருள்களைத் தயாரிக்க மூலப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா் .
பாபநாசம் அருகே சோழங்கநத்தம், எருமைப்பட்டி கிராமம், வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் நெப்போலியன் (30).
இவா் எருமைப்பட்டியில் உள்ள வீட்டில் அரசு அனுமதியின்றி வைத்திருந்த வெடிபொருள்கள் தயாரிப்புக்கான மூலப் பொருள்களை கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி உள்ளிட்ட போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.