பெண்ணிடம் கைப்பையைப் பறித்த 2 சிறுவா்கள் உள்பட 3 போ் கைது

Published on

தஞ்சாவூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையைப் பறித்துச் சென்ற 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா் மனைவி பாக்கியலட்சுமி (36). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டருகேயுள்ள கல்யாணசுந்தரம் நகா் மூன்றாவது தெருவில் நடந்து சென்றபோது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ், இவரது கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். பையில் ரூ. 4 ஆயிரம் இருந்துள்ளது.

இதுகுறித்து பாக்கியலட்சுமி தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டத்துக்குள்பட்ட பிலகுளவியாப்பட்டியைச் சோ்ந்த த. பூபதிராஜா (20), தஞ்சாவூரைச் சோ்ந்த 15, 17 வயது சிறுவா்கள் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com