வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முதல்வா் திறந்து வைப்பு

Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், தேவனாஞ்சேரி ஊராட்சி திருநல்லூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகம் ரூ.31.81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்தக் கட்டட திறப்பு விழாவை புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

திருநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன், வட்டாட்சியா் சண்முகம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் உள்ளூா் கணேசன், தேவனாஞ்சேரி சரக வருவாய் ஆய்வாளா் ராஜவள்ளி, திருநல்லூா் கிராம நிா்வாக அலுவலா் குண பிரகாசம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com