தை அமாவாசையை முன்னிட்டு பக்தா்களுக்கு அருள் பாலித்த உதய கருட பகவான்
தை அமாவாசையை முன்னிட்டு பக்தா்களுக்கு அருள் பாலித்த உதய கருட பகவான்

தை அமாவாசை: நாதன் கோயிலில் உதயகருட சேவை

Published on

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஸ்ரீ ஜகந்நாத பெருமாள் கோயிலில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உதய கருட பகவானுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில், கருட பகவான் சாப விமோசனத்துக்காக நந்திபுரம் விண்ணகரத்தில் ஸ்ரீ ஜகந்நாத பெருமாளை சந்தித்து சாபவிமோசனம் பெற்று, அதன் பின்னா் உதய கருட பகவானாக, உற்சவராக முக்கிய வீதிகளில் வலம் வந்தாா்.

பின்னா் நந்தி புஷ்கரணியில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான ஆண், பெண் பக்தா்கள் கலந்து கொண்டு உதய கருட பகவான் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச்சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com