தஞ்சாவூர்
211 பேருக்கு ரூ. 36.71 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தஞ்சாவூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் 211 பேருக்கு ரூ. 36.71 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வழங்கினாா்.

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பல்வேறு திட்டங்களில் 211 பேருக்கு ரூ. 36.71 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.