தஞ்சாவூர்
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வேளாண் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் கையில் மெழுகுவா்த்தி மற்றும் தேசியக்கொடியுடன் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2024-2025 ஆண்டுக்கான சம்பா பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு இதுவரை வழங்கப்படாமல் உள்ள பயிா் காப்பீடு இழப்பீடு தொகையை காலதாமதமின்றி வட்டியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி தேசியக்கொடியுடன் பாபநாசம் வேளாண் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்க செயலா் சுவாமிமலை விமலநாதன் தலைமையில் 50-ற்கும் மேற்பட்ட விவசாயிகள் கவனயீா்ப்பு முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
