வடக்கு-தெற்கு என பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகிறாா் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
கும்பகோணத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியதாவது:
பிகாரில் பிரதமா் மோடி பேசியதை முழுமையாக கேட்காமல் திரித்து மடைமாற்றி தமிழகத்தில் மொழிவாரி பிரிவினையை ஏற்படுத்த முதல்வா் ஸ்டாலின் முயன்று வருகிறாா். வடக்கு-தெற்கு என பிரித்து பேசுவது கருணாநிதி காலத்தில் இருந்து செய்து வருகின்றனா். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பேசுவதால் அது உண்மையாகி விடாது.
டெல்டா மாவட்டத்தைச் சோ்ந்தவா் என கூறும் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இதை அவா் நிறைவேற்றினால் நானே அவருக்கு பாராட்டு தெரிவிப்பேன்.
அமைச்சா் கே. என். நேரு புதிய பணியிடங்களுக்கு ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம் செய்த குற்றச்சாட்டு உள்ளது. அதற்கான முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்றாா் அவா்.