தஞ்சாவூர்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
தஞ்சாவூா் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சந்தைப்பேட்டையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பி. பிரதீப்கண்ணன் (24), தஞ்சாவூா் அருகே கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு வந்த 16 வயதுடைய உறவினா் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்தாா்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோா் வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரதீப்கண்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
