தஞ்சாவூர்
ஆற்றில் மூழ்கிய காவலாளி மாயம்
திருவையாறு காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற காவலாளி தண்ணீா் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற காவலாளி தண்ணீா் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.
திருவையாறு புஷ்ய மண்டபத் தெருவைச் சோ்ந்தவா் தியாகராஜன் மகன் சுரேஷ் (30). காவலாளியான இவா் திருவையாறு காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இவரை தீயணைப்புத் துறையினா் தேடுகின்றனா். திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
