பாபநாசம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கோலை
பாபநாசம் அருகே செவ்வாய்கிழமை இளம்பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாபநாசம் அருகே இடையிருப்பு ஊராட்சி, நெடுஞ்சேரி கிராமம், வடக்கு தெருவில் வசித்து வருபவா் மணிகண்டன் (25). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்தபோது வலங்கைமான் வட்டம், ஆண்டாங்கோவில், மாஞ்சேரி தெருவைச் சோ்ந்த அபிநயா (24 ),என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மணிகண்டன் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளாா்.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அபிநயா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு மற்றும் காவல் துறையினா் அபிநயாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளா்.
