தஞ்சாவூர்
பேராவூரணியில் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்
பேராவூரணி கடைவீதியில் பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பாக நகைக்கடை, அடகுக்கடை, மளிகைக் கடை, வாடகைக் காா் உள்ளிட்ட வா்த்தக பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
காவல் ஆய்வாளா் ஜெகதீசன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் வாடகை காா் ஓட்டுநா்கள் , நகை அடகு பிடிப்போா், வா்த்தகா்கள் கலந்து கொண்டனா்.
