தஞ்சாவூர்
பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.
அம்மாபேட்டை காவல் சரகம், புத்தூா் வடக்கு மேலத் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஹரிபிரசாத் (15). இவா் அம்மாபேட்டை ரயிலடி ரோடு பகுதி மெக்கானிக் பட்டறையில் கடந்த சில நாள்களுக்கு முன் வேலையில் சோ்ந்தாா்.
இந் நிலையில் திங்கள்கிழமை மதியம் மோட்டாா் சைக்கிளுக்கு வாட்டா் சா்வீஸ் செய்ய சுவிட்டை இயக்கியபோது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை போலீஸாா் ஹரிபிரசாத் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
