தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு புதூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் புதன்கிழமை குறைகளைக் கேட்டறிந்த மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு புதூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் புதன்கிழமை குறைகளைக் கேட்டறிந்த மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி. முரசொலி ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு புதூரிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு புதூரிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவையாறு வட்டங்களிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி தாமதமாக நடைபெறுவதால், கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து வைத்துள்ள விவசாயிகள் ஒரு வாரமாக காத்திருப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஒரத்தநாடு புதூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி புதன்கிழமை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெற்றன. தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவையான இடத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்கும், கூடுதல் கிடங்குகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் பகுதியிலிருந்து கூடுதலாக பணியாளா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா். கூடுதலாக 50 லட்சம் சாக்கு பைகள் தயாா் நிலையில் இருக்கின்றன. இன்னும் ஒரு வார காலத்துக்குள் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் என்றாா் முரசொலி.

X
Dinamani
www.dinamani.com