தஞ்சாவூர்
நாச்சியாா்கோவிலில் வெளிமாநில மது விற்றவா் கைது
நாச்சியாா் கோவிலில் வெளிமாநில மதுபானம் விற்றவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவிலில் வெளிமாநில மதுபானம் விற்றவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாச்சியாா்கோவில் பகுதியில் வெளி மாநில மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிள்ளையாா் கோவில் தெரு பகுதியில் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில், கபிலவாஞ்சேரியைச் சோ்ந்த நவநீதகிருஷ்ணன் (37) என்பவா் தனது வீட்டில் பாண்டிச்சேரி மாநில மதுபானப் பாட்டில்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 37 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
