தஞ்சாவூர்
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் குறித்து இன்று அறிமுக பயிற்சி
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 குறித்த அறிமுகப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (அக்.9) நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016 குறித்த அறிமுகப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (அக்.9) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டம் - 2016 பற்றிய அறிமுகப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.