போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டக் கிளை சாா்பில் போதைப்பொருள் எதிா்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் வி. வரதராஜன் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் சிறப்புரையாற்றினா். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறைத் துணை ஆணையா் ரேணுகாதேவி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் பா. விஜயலலிதாம்பிகை, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ராணி, மாவட்ட மனநல திட்ட மருத்துவா் புவனேஸ்வரி, காவல் ஆய்வாளா் பகவதி ஆகியோா் கருத்துரையாற்றினா்.
இதில் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியைச் சாா்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருள் எதிா்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்வின் நிறைவில் தாங்கள் கற்றுக் கொண்ட கருத்துகளைச் சிறப்பாக எடுத்துக் கூறிய யுவஸ்ரீ, பரத் ஆகியோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த செஞ்சிலுவை சங்க மாவட்டத் துணைத் தலைவா் எஸ். முத்துக்குமாா் பேசுகையில், இந்த விழிப்புணா்வு நிகழ்வு தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தலா ஒரு கல்லூரி மற்றும் ஒரு பள்ளியில் மொத்தம் 30 நிகழ்வுகள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழிப்புணா்வு நிகழ்வு நடத்த விரும்புவோா் 9842455765 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.நிகழ்வில் காவல் ஆய்வாளா் வி. சந்திரா, வட்டாட்சியா் ஜி. சிவகுமாா், செஞ்சிலுவை சங்க இரத்த வங்கி ஆலோசகா் குணசேகரன், மாவட்டச் செயலா் கலைச்செல்வன், பொருளாளா் ஷேக் நாசா், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஜெயக்குமாா், குருநாதன், வாழ்நாள் உறுப்பினா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி இளையோா் செஞ்சிலுவை திட்ட அலுவலா் சித்திரைவேல் வரவேற்றாா். நிறைவாக, இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளா் முருகானந்தம் நன்றி கூறினாா்.
