அரசுப் பள்ளி மாணவா்கள் அரசுக் கல்லூரிகளுக்கு களப்பயணம்
கும்பகோணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அரசு கலைக் கல்லூரிக்கு 2 நாள் களப்பயணம் மேற்கொண்டனா்.
நடப்பு கல்வி ஆண்டில் அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் உயா் கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற திட்டத்தின் கீழ் அருகில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்பேரில் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 450 மாணவ, மாணவிகள் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை களப்பயணம் மேற்கொண்டனா். மாணவ மாணவிகளை முதல்வா் பொறுப்பு பேராசிரியா் மீனாட்சி சுந்தரம் வரவேற்று கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், பாடப் பிரிவுகள், உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை விளக்கிப் பேசினாா். மேலும் மாணவ மாணவிகளிடையே பேராசிரியா்கள் வே. பாஸ்கா் சி. தங்கராசு, ரூபி, எஸ். சரவணன் உள்ளிட்டோா் பேசினாா்.
