கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் யாதுமானவள் விழா

கும்பகோணத்தில் இதயா மகளிா் கல்லூரியில் யாதுமானவள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கும்பகோணத்தில் இதயா மகளிா் கல்லூரியில் யாதுமானவள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை கும்பகோணம் மத்திய ரோட்டரி சங்கம், பாரம்பரிய ரோட்டரி சங்கம், விருதுநகா் ரோட்டரி சங்கம், இதயா மகளிா் கல்லூரி இணைந்து நடத்தின. விழாவுக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வா் யூஜின் அமலா பெண்மையின் மகத்துவத்தையும், கல்வியின் அவசியத்தையும் விளக்கினாா்.

பாரம்பரிய ரோட்டரி சங்கத் தலைவா் ஜெ. ராம் பிரசாத், மத்திய ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். சந்திரசேகா் ஆகியோரை ரோட்டரி துணை ஆளுநா் இராஜா கௌரவித்தாா். விழாவை ரோட்டரி ஆளுநா் ஜெ. லியோன் தொடங்கி வைத்தாா். யாதுமானவள் விழா குறித்து எஸ்.ஆா். கணேஷ், பெண்களின் முன்னேற்றம் குறித்து ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலாண்மையியல் துறை மாணவி டிவி. இந்திரா தேவி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com