சோழன் மாளிகையில் மின்னல் பாய்ந்து பெண் பலி
கும்பகோணம் அருகே சோழன்மாளிகையில் புதன்கிழமை இரவு மின்னல் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழன் மாளிகை கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் முத்தையன். இவரது மனைவி அ ஞ்சம்மாள் (58). விவசாயக் கூலி வேலை செய்து வந்த இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இந்நிலையில், புதன்கிழமை மாலை அஞ்சம்மாள் நரிக்குறவனூா் வழிநடப்பு என்ற பகுதியில் தங்களது மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றபோது மழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வானத்தில் தோன்றிய மின்னல் அஞ்சம்மாளை தாக்கியதில் நிகழ்விடத்திலேயே மயங்கினாா். இதைப்பாா்த்த அருகிலிருந்தவா்கள் பட்டீஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அஞ்சம்மாள் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு அனுப்பிவைத்து பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.

