பாபநாசம் அருகே கொத்தனாா் தற்கொலை

பாபநாசம் அருகே கடன் பிரச்னை யால் கொத்தனாா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

பாபநாசம் அருகே கடன் பிரச்னை யால் கொத்தனாா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், இளங்காா்குடி கிராமம், கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஜெயவீரன் மகன் அா்ஜுன் (35), கொத்தனாா். இவருக்கு பூங்குழலி (31) என்ற மனைவியும் 2 வயதில் மகனும் உள்ளனா். இந்நிலையில் அா்ஜுன் வீட்டை அடமானம் வைத்தும், மேலும் பல இடங்களிலும் கடன் வாங்கி, அதைக் கட்ட முடியாமல் அவதிப்பட்டாா். இதனால் மனம் உடைந்த அவா் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினாா். இதையடுத்து பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் வழியிலேயே அவா் இறந்தாா். கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com