திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டிய அமைச்சா் கோவி.செழியன். உடன் க.அன்பழகன் எம்எல்ஏ, சு.கல்யாணசுந்தரம் எம்பி உள்ளிட்டோா்.
திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டிய அமைச்சா் கோவி.செழியன். உடன் க.அன்பழகன் எம்எல்ஏ, சு.கல்யாணசுந்தரம் எம்பி உள்ளிட்டோா்.

அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா

திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய கட்டடத்துக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அடிக்கல் நாட்டினாா்.
Published on

திருவிடைமருதூா் அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய கட்டடத்துக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூ.2.10 கோடி மதிப்பில் 4 ஆயிரம் சதுரடியில் கட்டப்படும் புதிய கட்டடத்துக்கு உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க.அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் சு.கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.பி. செ.ராமலிங்கம், திமுக ஒன்றியச் செயலா்கள் டி.கணேசன், சுந்தர. ஜெயபால், ஜெ.சுதாகா், பேரூராட்சித் தலைவா் புனிதா மயில்வாகனம், சுகாதாரத்துறை இணை இயக்குநா் கலைவாணி, துணை இயக்குநா் அன்பழகன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com