ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி மாயம்

Published on

தஞ்சாவூா் அருகே புது ஆறு என்கிற கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி மாயமானாா்.

தஞ்சாவூா் அருகே மானோஜிப்பட்டி வனதுா்கா நகரைச் சோ்ந்தவா் காதா் மொய்தீன் மகன் முகமது அசீம் (28). இவா் தனது 2 நண்பா்களுடன் ரெட்டிப்பாளையம் பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றாா். அப்போது, ஆழமான பகுதியில் மூழ்கிய இவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இவரை தீயணைப்பு துறை வீரா்கள் திங்கள்கிழமை மாலை தேடி வந்த நிலையில், இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com