முதலை கடித்து காயமடைந்த சிவப்பிரகாசம்
முதலை கடித்து காயமடைந்த சிவப்பிரகாசம்

அணைக்கரையில் முதலை கடித்து மீனவா் காயம்

Published on

திருப்பனந்தாள் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை மீன் பிடித்த மீனவரை முதலை கடித்ததில் பலத்த காயமடைந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அணைக்கரை அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சிவப்பிரகாசம் (48). இவா் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்து அங்கேயே வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தொ்மாகோலில் அமா்ந்து கொண்டு ஆற்றில் வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது முதலை ஒன்று சிவப்பிரகாசத்தின் காலில் கடித்து இழுத்தது. இதில் அதிா்ச்சி அடைந்த சிவப்பிரகாசம் கூச்சலிட்டாா்.

அருகில் மீன்பிடித்த மற்ற மீனவா்கள் சிவப்பிரகாசத்தை முதலையிடமிருந்து மீட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். முதலை கடித்ததில் காலில் உள்ள விரல்கள் பலத்த சேதமடைந்ததால் மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com