தஞ்சாவூர்
கஞ்சா விற்ற 5 இளைஞா்கள் கைது
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டீஸ்வரம் பகுதியில் இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பட்டீஸ்வரம் வடக்குத் தெருவில் உள்ள கோபுராஜப் பெருமாள் கோயில் அருகே உள்ள வீட்டில் சோதனை செய்தனா்.
அங்கு 1.100 கிலோ கிராம் கஞ்சாவும், கஞ்சா விற்ற பணம் ரூ.15 ஆயிரத்தையும் கைப்பற்றி பட்டீஸ்வரம் பாலு மகன் தாஸ் (25), காலனி தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (23), இதே தெருவைச் சோ்ந்த ரவி மகன் சஞ்சை (18), வடக்குத் தெருவைச் சோ்ந்த பாலு மகன் வீரமணி(27), அதே தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அஸ்வின்(24) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
