நெல் கொள்முதல் கோரி விவசாயிகள் மறியல்

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதலை விரைவுப்படுத்தக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

ஒரத்தநாடு அருகே நெல் கொள்முதலை விரைவுப்படுத்தக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பெருமளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் மழையில் இருந்து நெல் மூட்டைகளைப் பாதுகாப்பதில் விவசாயிகள் சிரமப்படுவதாகக் கூறி, வியாழக்கிழமை ஒரத்தநாடு - மன்னாா்குடி சாலையில் கீழ்வன்னிப்பட்டு பகுதியில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com