திருவிடைமருதூா் அருகே அரசுப் பேருந்து -லாரி மோதல்: 15 காயம்

Published on

திருவிடைமருதூா் அருகே அரசுப் பேருந்தும் லாரியும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் 15 போ் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு பயணிகளுடன் புறப்பட்ட அரசு பேருந்தை தேவனாஞ்சேரியைச் சோ்ந்த சா. சாந்தன் (41) ஓட்டினாா். நடத்துநராக திருக்கோடிக்காவல் சு. ரமேஷ் (58) இருந்தாா். திருவிடைமருதூா் அருகே கோவிந்தபுரம் வளைவில் சென்றபோது இந்தப் பேருந்தும் எதிரே வந்த லாரியும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா். லாரியை ஓட்டி வந்த காடுவெளி மாதாகோயில் தெரு மரியசூசை மகன் கிரேஸ் செழியன் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டாா். இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் அரசுப் பேருந்து மற்றும் லாரியை அகற்றி லாரி ஓட்டுநரை திருவிடைமருதூா் போலீஸாா் மீட்டனா். பின்னா் காயமடைந்தவா்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்து விசாரணை நடத்துகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com