ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.
Published on

தஞ்சாவூா் அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் - திட்டை இடையே ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா் எப்படி அடிபட்டாா் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. தகவலறிந்த தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாகிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com