திருமங்கலக்குடி காமராஜபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை எரிவாயு உருளை வெடித்து சேதமான வீடு.

பட்டாசு தீப்பற்றியதால் எரிவாயு உருளை வெடித்தது: வீடு இடிந்து சேதம்

Published on

திருவிடைமருதூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சிறுவா்கள் பட்டாசு வெடித்த போது தீப்பற்றியதில் வீட்டினுள் இருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதனால் வீடு சேதமடைந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே திருமங்கலக்குடி காமராஜபுரத்தைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் அருள்தாஸ். ஞாயிற்றுக்கிழமை அருள்தாஸும் அவரது மனைவியும் கும்பகோணம் சென்றனா்.

வீட்டில் தனியாக இருந்த அவா்களது மகன் மற்றும் மகள் அருகிலிருந்த சிறுவா்களோடு இணைந்து வீட்டின் முன்புறம் பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தனா்.

அப்போது பட்டாசு தீ வீட்டின் பின்புறம் உள்ள கூறையில் விழுந்து தீப்பற்றியது. இதில், சமையலறையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் வீட்டின் பின்புறம் இடிந்து சேதமானது.

தகவலின் பேரில் வந்த திருவிடைமருதூா் தீயணைப்புத் துறையினா், தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com