பேராவூரணி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தேடுகின்றனா்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை கைப்பேசியில் பேசிய மா்ம நபா், பேராவூரணி நீலகண்ட பிள்ளையாா் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் , அது அதிகாலை 3 மணிக்கு வெடிக்கும் எனவும் கூறி இணைப்பைத் துண்டித்தாா்.
இதையடுத்து போலீஸாா் நள்ளிரவில் அக் கோயில் கோயில் முழுவதும் சோதனையிட்டதில் வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இதைத் தொடா்ந்த மிரட்டல் எண்ணை ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா், மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோயில் பகுதியைச் சோ்ந்த சிங்காரவேலு (37) என்பதும், ஏற்கெனவே கடந்த 2024 ஆம் ஆண்டு இக்கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் தேடுகின்றனா்.
